USB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம்.
1. முதலில் உங்கள் பென் டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணினியில் செருகவும்.
2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Managerஎன்பதை தெரிவு செய்யவும்.
3. இப்போது உங்கள் கணினியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். (பெரும்பாலும் நிறுவனத்தின் பெயரோடு இருக்கும்.) கீழே உள்ளது போல.
4. அதன் மீது Double Click செய்யவும்.
5. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் “Quick removal (default)” என்பதை தெரிவு செய்யவும். (ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருந்தால் பிரச்சினை இல்லை).
Windows XP-உள்ள கணினிகளுக்கு இது கீழே உள்ளது போல இருக்கும்.
அவ்வளவு தான் நண்பர்களே, இனி நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன், உங்கள் பென் டிரைவ் போன்றவற்றை Safely Remove கொடுக்காமலேயே Remove செய்ய இயலும். இதனால் உங்கள் பென் டிரைவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.