செல்போன் வாங்குவதற்கு முன்பு ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கயமான விடயங்கள் சில உள்ளன. அவற்றை தெரிந்துகொண்டால் ஒரு நல்ல செல்போனை யாருடைய ஆலோசனையின்றி நீங்களே வாங்கலாம்.
செல்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவைகள்:
தீர்மானம்: முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத்தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, "இதுதான் நமக்கேற்ற செல்போன்" எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடைக்குச் சென்று வாங்கலாம்.
செல்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவைகள்:
தீர்மானம்: முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத்தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, "இதுதான் நமக்கேற்ற செல்போன்" எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடைக்குச் சென்று வாங்கலாம்.
ஆன்லைன் சாப்பிங்: மொபைல் வாங்க முடிவெடுத்ததும் ஆன்லைனில் வீட்டில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து செல்போனை பெற முயற்சிக்காதீர்கள்(Avoid Online shopping). இது சில வேளைகளில் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். நேரடியாக நீங்களே செல்போன் கடைக்குச் சென்று வாங்குவதுதான் சிறந்த வழி.
எக்சேன்ஜ் ஆஃபர்: நீங்கள் உங்களுடைய பழைய போனை மாற்றி, புதிய போனை வாங்குவதென முடிவெடுத்துவிட்டால், அங்குள்ள எங்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer)பற்றி நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய போனுக்கு அவர்கள் கொடுக்கும் விலை சரிதானா என நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். சில கடைகளில் மிக குறைந்த விலையே பழைய போனுக்கு (Old cellphone) தருவார்கள். அப்படிப்பட்ட கடைகளில் உங்கள் பழைய செல்போனுக்குரிய விலையை பேரம் பேசிப்பாருங்கள். பேரம் பேசுவதில் கூச்சமே கூடாது. ஏனென்றால் இது உங்களுடைய போன். இதனால் உங்களுக்கு ஒரு நூறுகள் கிடைத்தால் கூட இலாபம்தானே..
பட்டன்கள் முக்கியம்: செல்போனில் உள்ள மற்ற கண்ணுக்குத் தெரியாத வசதிகளை விட அடிக்கடி உபயோகிக்கும் பட்டன்கள் முக்கியம். தரமான keypad உள்ள செல்போனை தெரிவு செய்வது நல்லது.
பேசுவது, கேட்பது ரொம்ப முக்கியம்: செல்போன் வாங்கியவுடனேயே சிம்கார்டை போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display) என பல வசதிகளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் பேசுவதற்கும், கேட்பதற்கும் செல்போன் முக்கியமாக உங்களுக்குத் தேவை என்பதை நினைவில் வையுங்கள். எதிர்முனையிலிருந்து பேசுவது தெளிவாக, சப்தமாக கேட்கமுடிகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
செல்போனை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு: செல்போன் அடிக்கடி பயன்படுத்துபவர்களெனில் மற்ற வசதிகளைவிட ஒலி வாங்கி (mike), ஸ்பீக்கர் (speaker) போன்றவைகள் சிறந்த்தாக உள்ள அம்பாசிடர் மாடல் (ambassador model phones) போன்களை வாங்குவது சிறந்தது. காரணம் அதிக சென்சிடிவ் டைப் போன்கள் அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும்போது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். அம்பாசிடர் வகை போன்கள் அதிகநாள் உழைக்க கூடியது.
காஸ்ட்லி போனா? கவனம் தேவை: நீங்கள் வாங்கும் மொபைல் காஸ்ட்லி ஐட்டமாக (costly phone items) இருப்பின் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஒன்றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு வாங்குங்கள். வாங்கிய காஸ்ட்லி போனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்ளுங்கள். குறிப்பாக Mobile Insurance செய்துவிடுங்கள். மொபைல் இன்ஸ்சூரன்ஸ் பற்றித் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இதனால் உங்களுடைய போன் திருடு போனாலோ அல்லது தீ, மழை, விபத்துப் போன்றவற்றால் சேதம் அடைந்தாலோ மீண்டும் அந்தப் போனுக்குரிய தொகையை பெறுவதற்கு பயன்படும்
சீனா மொபைல்கள் தவிருங்கள்: கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன் மாடல்களைத் (china phone models) தவிர்த்துவிடுங்கள். அதிக கவர்ச்சி உள்ள அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். அதில் உள்ள ஆன்டெனா வழியாக ரேடியேஷன்கள் (high Radiation) அதிகமாக உள்வாங்கப்படும். இந்த அதிகளவு ரேடியேசன்களால் உடலுக்கு கேடு உருவாகும். விலைகொடுத்து நோயை வாங்க வேண்டாமே..!
பேட்டரி லைப்: மொபைல் போனுக்கு பேட்டரி லைப் (battery backup) ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக்கும் போன்களையே கேட்டு வாங்குங்கள். அடிக்கடி பேட்டரி தீருவதால் தேவையில்லாத "டென்சன்" உருவாகும். முக்கியமான நேரங்களில் "பேட்டரி லோ" காட்டி உங்களை எரிச்சலைடய வைக்கும்.
மேற்கண்ட விடயங்கள் அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டால் ஒரு நல்ல செல்போனை யாருடைய ஆலோசனையின்றி, நீங்களே தேர்ந்தெடுத்து விடலாம்.
- See more at: http://www.thangampalani.blogspot.com/2013/09/blog-post_954.html#sthash.ggN03k7r.dpufமேற்கண்ட விடயங்கள் அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டால் ஒரு நல்ல செல்போனை யாருடைய ஆலோசனையின்றி, நீங்களே தேர்ந்தெடுத்து விடலாம்.