உங்கள் கணினி டெஸ்க்டாப்பின் ரைட்கிளிக் பயன்பாடு குறித்த சில தகவல்கள்!

DesktopRightClick
கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள். ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன. ஆனால் பெரும்பாலான பயனர்கள் அவற்றினை முறையாக பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் இப்போது நாம் தெரிந்துகொள்வோம்.

டெஸ்க்டாப்பில் Right Click செய்யும் பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆப்சன்கள்
1. Large icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.large-icons
2. Medium icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.medium-icons
3. Small icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.small-icons
4. Auto arrange icons
இந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.
5. Align icons to grid
இந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.
6. Show desktop icons
icons-align-to-grid
இந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets
விண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்ஜெட்டுகள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.
Sort By
இந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Desktop-ல் ரைட்கிளிக் பற்றிய இந்த தகவல்கள் நிச்சயம் புதிய கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்.
Previous
Next Post »