எளிய தமிழில் Python -7

  1. loops(சுழல்கள்) :
loops என்பது ஒரு def(செயல்பாட்டில்) statement முதலில் செயல்படுத்தப்படுகிறது, அதன் பிறகு இரண்டாவது மற்றும் பல. கொடுக்கப்பட்ட நிபந்தனை True இருக்கும் வரை loop ஆனது இயங்கிக் கொண்டே இருக்கும்.



6.1 for   :             
table அல்லது string போன்ற எந்தவரிசையின் பொருள்களிலும் அது முடியும்வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.இதனையே for loop என்கிறோம்.

உதாரணம் 1:
x=['apple','milk','mango']
for fruit in x:
print('i want '+fruit)
print(“for loop completed”)

x என்ற list-ல் மூன்று object ஆனது பயன்படுத்தப்படுகிறது.x என்ற list-ல் உள்ள மூன்று object-களும் for loop-ன் மூலம் ஒன்றன் கீழ் ஒன்றாக object ஆனது fruit-ல் store செய்யப்பட்டு print மூலம் display செய்யப்படும்.object அனைத்தும் செயல்படுத்தி முடித்தபின் கடைசியாக “for loop completed” என்று display செய்யப்படும்.
வெளியீடு:
6.2 while:
while-ல் உள்ள condition True ஆக இருக்கும் வரை while-க்கு கீழ் உள்ள அனைத்தும் run ஆகிக் கொண்டே இருக்கும். condition தவறாகும் போது  while loop செயல்படாது.
உதாரணம் 1:
var = 10
while var > 0:
print ('Current variable value :', var)
var = var -1
print(“Good bye”)

var என்ற variable-ல் 10 என்பது store செய்யப்படுகிறது.var என்ற variable-ன் மதிப்பானது while loop-ல் 0-வை விட பெரியதா என்று check செய்து கீழே உள்ள statement ஆனது செயல்படுத்தபடும்.      var என்ற variable-ன் மதிப்பானது ஒன்றன் கீழ் ஒன்றாக குறைக்கப்பட்டு வரும் 0 என்றதும் while loop ஆனது முற்றிலுமாக முடிந்து “good bye” என்று display செய்யப்படும்.இதன் வெளிப்பாட்டைபடத்தில் காணலாம்.





6.3 Nested loop
Nested loop condition என்பது loop condition-க்குள் loop condition-ஐ பயன்படுத்துவதாகும்.இதனையே nested-loop என்கிறோம்.
இங்கு for loop-ல் for loop ஆனது பயன்படுத்தபடுகிறது.அதேபோன்று எந்த loop-ல் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
i என்பதில் 1 முதல் 10 வரை loop ஆகும்.அதேபோல் i என்பதில் 1 முதல் 10 வரை loop ஆகும்.இவை இரண்டும் k-ல் i-யும்,j-யும் multiple செய்யப்பட்டு store ஆகிறது.ஒவ்வொரு loop display செய்த பின்பும் அடுத்த வரியில் display ஆகும்.

-தொடரும்.
Previous
Next Post »