வணக்கம் மக்களே...எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்... 2016 இன் இறுதிப்பகுதியில் இருந்து கொண்டு சில போஸ்ற் களை வெளியிடுவதில் மகிழ்ச்சி....இன்றைய போஸ்ற் இல் உங்களிடம் இருக்கும் Smart Phone இனை எவ்வாறு CCTV கமராவாக தொழிற்பட செய்து எவ்வளவு தொலைவில் இருந்து கொண்டும் உங்கள் இடத்தை அவதானிக்கக்கூடிய வசதியை பற்றி
கூறப்போகிறேன்...
பலரிற்கு CCTV என்பதற்கு என்ன விரிவாக்கம் என்பது கூட தொரிந்திருக்காது எனவே முதலில் CCTV இன் விரிவாக்கம் என்ன என்று கூற வேண்டும்.... CCTV இன் விரிவாக்கம் "Closed-Circuit Television " ஆகும். அதாவது தமிழில் ‘மூடிய சுற்று தொலைக்காட்சி‘ என்று கூறலாம்....
CCTV கமரா ஏன் என்று கூறவே தேவையில்லை ஏனெனில் CCTV கமரா பற்றி யாரும் அறியாது இருக்க முடியாது..... சரி நாம் நம்ம விசயத்துக்கு வருவோம்...
இதற்கு தேவையானவை -
- தொழிற்படக்கூடிய Smart Phone.(அதிக பட்ச அளவு 9 Phone's)
- Windows PC , Android Tablet , iPhone , iPad ,( இதில் ஏதாவது ஒன்று)
இங்கே அதிகபட்சம் 9 போன்களை தான் இணைக்க முடியும். அத்துடன் போனின் 2 கமராக்களையும் செயற்பட வைக்க முடியும்...( 9 போன் எனின் 18 கமராக்கள்)
எனி உங்கள் Android Smart Phone இல் Play Store சென்று இந்த App இனை நிறுவிக்கொள்ளுங்கள்.... நீங்கள் பயன்படுத்த நினைக்கும் அனைத்து போன்களுக்கும் நிறுவ வேண்டும்...
AVS என்று இருக்கும் App இனை திறவுங்கள்
App Opining |
திறந்தவுடன் உங்களுக்கு Camera ID , User Name , Password மற்றும் Streamer Name என்பன கிடைக்கும்.... இவற்றை எனி கணனியில் Add பண்ண வேண்டும்.
பிறகு உங்கள் கணனிக்குரிய மென்பொருளை நிறுவ வேண்டும் இதை இங்கே கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள்.. பின்னர் Install செய்யுங்கள்
இப்போது உங்கள் கணனியில் ரள்ள Application இனை திறவுங்கள் பின்னர் Add Camera என்பதை தெரிவு செய்யுங்கள்...
பின்னர் உங்கள் கமரா அட் ஆகி விடும்... பின்னர் Select A Camera என்பதனை அழுத்தி கமராக்களை ஆரம்பியுங்கள்...
சரி இப்போது உங்கள் கமராக்கள் வேலையை தொடங்கிவிடும்... எனி உங்களுக்கு தேவையான இடத்தில் உங்கள் போனை பாதுகாப்பாக வையுங்கள்...
ஒரு போன் இனையே 9 இடங்களிலும் அட் செய்துள்ளேன்..