WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி?

WhatsApp பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் பிடிக்காத ஒரு விஷயம் என்றால் அது ‘Last Seen’  என்ற ஒன்று தான். இது நாம் எப்போது கடைசியாக WhatsApp-ஐ பயன்படுத்தினோம் என்று நம் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு வசதி. நீங்கள் Android போன் பயன்படுத்தினால் இதை மறைக்க ஒரு வழி உள்ளது எப்படி என்று இன்றைய “கற்போம்” பதிவில் காண்போம்.
WhatsApp என்றால் என்ன என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கவும் – WhatsApp Messenger – ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு
ஏற்கனவே WhatsApp பயன்படுத்துபவர்கள் அதை தற்போதைய புதிய வெர்ஷனான WhatsApp 2.11.186 க்கு Update செய்து கொள்ள வேண்டும். [எந்த வெர்ஷன் என்று பார்க்க WhatsApp >> Settings >> Help >> About செல்லவும். பழையது என்றால் Google Play யில் My Apps க்கு சென்று Update செய்து கொள்ளவும். ]
இப்போது WhatsApp Settings பகுதியில்  Account என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து கீழே படத்தில் உள்ளபடி Privacy என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
Karpom Screenshot_2014-03-12-09-51-40
Privacy பகுதியில் முதல் வசதியாக படத்தில் உள்ளபடி Last Seen என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
Karpom Screenshot_2014-03-12-09-51-46
இதில் மூன்று வசதிகள் இருக்கும். Everyone, My Contacts, Nobody என்று. படத்தில் உள்ளபடி Nobody என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
Karpom Screenshot_2014-03-12-09-51-58
இனி யாராலும் நீங்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்துனீர்கள் என்பதை பார்க்க முடியாது.  அதே போல உங்களாலும் உங்கள் நண்பர்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்க இயலாது 
Previous
Next Post »