பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?

பேஸ்புக் பேஜ்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பல தனியார்/அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நபர்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் ஒரு பேஜ் வைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பேஜில் பகிர நினைத்து அந்த நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் பகிர முடியாமல் போகலாம். அதை சமாளிக்க பேஸ்புக் பேஜ்களில் உள்ள ஒரு வசதி தான் போஸ்ட்களை Schedule செய்வது. 

முதலில் உங்கள் பேஜ்க்கு சென்று குறிப்பிட்ட போஸ்ட் குறித்த தகவல்களை எழுதுங்கள். எழுதி முடித்த பின் Post என்பதற்கு மேலே ஒரு கடிகார ஐகான் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
schedule icon
இப்போது உங்களுக்கு Add Year என்று வந்திருக்கும் அதில் வருடத்தை தெரிவு செய்யுங்கள், பின்னர் மாதம், தேதி மற்றும் நேரம் போன்றவற்றை தெரிவு செய்ய வேண்டும்.
schedule post
அவ்வளவு தான். இப்போது Schedule என்பதை கிளிக் செய்யுங்கள், குறிப்பிட்ட நேரத்தில் போஸ்ட் உங்கள் பேஜில் தானாகவே Publish ஆகிவிடும். போஸ்ட் Publish ஆகும் வரை அது Activity Log என்ற பகுதியில் இருக்கும் [Edit Page >> Use Activity Log ]. ஏதேனும் எடிட் செய்ய வேண்டும் என்றால் அதில் செய்து கொள்ளலாம்.
இந்த வசதி பேஜ்களில் மட்டுமே உள்ளது.
Previous
Next Post »