Android Application-களை கணினியில் Download செய்வது எப்படி?


Android Mobile – கள் வைத்துள்ள நிறைய பேர் பெரும்பாலான Application-களை Google Play-வில் இருந்து டவுன்லோட் செய்வார்கள். நீங்கள் கணினியில் இருந்து இன்ஸ்டால் செய்தாலும் உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அவை டவுன்லோட் ஆகும். சிலர் விலை குறைந்த Android Tablet/Mobile களை வாங்கி இருந்தால் Google Play-யில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியாது. இந்த நிலையில் அவற்றை கணினியில் தரவிறக்கம் செய்தால் நாம் எளிதாக அவற்றை இன்ஸ்டால் செய்யலாம். எப்படி அதை கணினியில் Download செய்வது என்று பார்ப்போம். 
1.முதலில் இந்த இணைப்பில் சென்று Real APK Leecher என்ற Application- ஐ உங்கள் கணினியில் டவுன்லோட் செய்யுங்கள். [கணினியில் இயங்கக் கூடியது]
2. இதை Extract செய்து “Real APK Leecher” -ஐ Run செய்யுங்கள். உங்கள் கணினியில் Java Install ஆகி இருந்தால் நேரடியாக Run ஆகும். இல்லை என்றால் அது டவுன்லோட் ஆகும்.  இப்போது கீழ் வரும் விண்டோ வரும். 
உங்களால் Google Play-யில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாவிட்டால் இதில் உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைய முடியாது. யாரேனும் உங்கள் நண்பரின் கணக்கை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். Email, Password தெரியும் Device ID என்பதற்கு அடுத்த ஸ்டெப்பில் உள்ளதை செய்யவும்.  
3.இப்போது உங்கள் அலைபேசியில் அல்லது நண்பரின் அலைபேசியில்  *#*#8255#*#*என்ற எண்ணுக்கு Call செய்யவும். இதில் Gtalk Service Monitor என்ற ஒன்று வரும். [வரவில்லை என்றால் இணைய இணைப்பை Enable செய்து Gtalk-இல் Sign-in செய்து விட்டு செய்யவும்]
4. இதில் கீழே உள்ளது போல Device ID என்று ஒன்று வரும். 
5. இதனை உங்கள் மேலே உள்ள Device ID – யில் தர வேண்டும். 
6.அடுத்து எங்கே Save ஆக வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு Save கொடுங்கள். கீழே உள்ளது போன்ற விண்டோ வரும். 
7. இதில் வலது பக்கம் உள்ள சர்ச் வசதி மூலம் Application-களை தேடலாம்.கீழே அவை வரும். அவற்றின் மீது Right Click செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
8. “Download This App” என்பது Disable ஆகி இருந்தால், குறிப்பிட்ட App மீது Double Click செய்யுங்கள். அந்த App உள்ள வரிசை Blue Background க்கு மாறும். இப்போது Right Click செய்து டவுன்லோட் செய்யலாம். 
Previous
Next Post »