Facebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?
Facebook சமூக வலைப்பின்னல் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (231,784 பயனாளர்கள் உபயோகிக்கும் இந்த நீட்சியின் தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இப்பொழுது திறக்கும் வசன பெட்டியில் Facebook -இல் லாகின் செய்து, Allow என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, முதலாவதாக செய்ய வேண்டியது.. Tools menu விற்கு சென்று Facebook Chat Manager மற்றும் Get Facebook ID ஐ க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் Facebook இன் ID ஒரு வசனப் பெட்டியில் தோன்றும், இதனை தேர்வு செய்து காப்பி செய்து கொள்ளுங்கள்.
மறுபடியும் Tools - Facbook Chat Manager - Create Account க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில், ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் Facebook ID ஐ பேஸ்ட் செய்து, உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools - Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.