டவுன்லோட் ஃபோல்டர்
ஃபயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஒபேரா, இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய எந்த ஒரு இணைய உலாவியாக இருந்தாலும் நீங்கள் டவுன்லோட் செய்யும் ஃபைல்கள் சேமிக்கப்படுவது பொதுவாக மை டாக்குமெண்ட்ஸ் பகுதியில் இருக்கும் டவுன்லோட் ஃபோல்டரில்தான். இந்த டிபால்ட் செட்டிங்கை மாற்ற விரும்பினால் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் டவுன்லோட்ஸ் பகுதியில் இரண்டு பட்டன்கள் காட்டப்படும். முதலாவது இருப்பது டிபால்ட் டவுன்லோட்
லொக்கேஷன் என்பதில் தற்போதுள்ள இடத்திற்குப் பதில் புதிய இடத்தை தேர்வு செய்து அமைக்கலாம் அல்லது இரண்டாவதாக இருப்பதை தேர்வு செய்தால் ஒவ்வொரு முறையும் எந்த இடத்தில் டவுன்லோட் செய்வது என்று கேட்கும் படியாக செட்டிங் அமைக்கலாம். டவுன்லோட் செய்யப்பட்ட கோப்பு எங்கு பதிவாகியுள்ளது என்ற குழப்பம் ஏற்பட்டால் டவுன்லோட் விண்டோவைக் காட்ட Ctrl+J என்ற கீகளை அழுத்தி திறக்கவும். இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட கோப்புகளின் பட்டியல் காட்டப்படும். அதில் பார்க்கவேண்டிய கோப்பின் மீது ரைட் கிளிக் செய்தால் Open Containing Folder என்று ஃபயர்பாக்சிலும், Show in folder என்று கூகுள் குரோமிலும் காட்டப்படும். அதனை கிளிக் செய்து கோப்பிருக்கும் ஃபோல்டரை எளிதாகத் திறக்கலாம்.
கணினி குறித்த தகவல்கள் பெற…
கண்ட்ரோல் பேனல் சென்று சிஸ்டம் என்பதைக் கிளிக் செய்து கணினி பற்றிய தகவல்களை அறிவதற்கு பதிலாக டெஸ்க்டாப் விண்டோவிலிருந்தபடியே கீபோர்டில் Win + Pause/Break ஆகிய கீகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் இந்த சிஸ்டம் தகவல் விண்டோவை எளிதாகப்பெறலாம்.
பிரிண்ட் ஸ்கிரீன்
விண்டோசில் உள்ள முக்கியமான வசதிகளில் பிரிண்ட் ஸ்கிரீன் எனப்படும் கணினித் திரையை படமாக எடுத்து பதிந்து கொள்ளும் வசதியும் ஒன்றாகும். இவ்வசதி கணினியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு பிழை செய்திகள் காட்டும்போதும், இணையதளப்பக்கத்தை டவுன்லோட் செய்ய முடியாத நிலையில் படமாக பதிவு செய்யவும், இன்னும் பல வழிகளில் இவ்வசதி உதவக்கூடியது.
கணினித் திரை முழுவதையும் படமாக எடுக்க Print Screen கீயை ஒரு முறை அழுத்தவேண்டும். இப்போது கிளிப் போர்டில் அந்தப் படம் பதிவாகிவிடும். பிறகு விண்டோஸ் பெய்ண்ட் அப்ளிகேஷனைத் திறந்து அதில் Ctrl+V கொடுத்து பேஸ்ட் செய்து சேவ் செய்யவும்.
கணினியை முழுமையாக பிரிண்ட் ஸ்கிரீன் கொடுக்காமல் குறிப்பிட்ட விண்டோவை மட்டும் படமெடுக்க Alt + Print Screen ஆகிய கீகளை ஒன்றாக அழுத்த வேண்டும். இதனையும் பெய்ண்ட் அல்லது போட்டோஷாப், ஜிம்ப் போன்ற வேறு இமேஜ் எடிட்டிங் மென்பொருள்களிலும் பேஸ்ட் செய்து பதிந்துகொள்ளலாம்.
விண்டோஸ் 8 & 10 கணினிகளில் பெய்ண்ட் போன்ற எந்த ஒரு இமேஜ் எடிட்டர் அப்ளிகேஷனையும் பயன்படுத்தாமல் இமேஜ் கோப்பாகவே சேவ் செய்யப்படும் வகையில் இவ்வசதி இன்னும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. விண்டோஸ் கீயுடன் பிரிண்ட் ஸ்கிரீன் கீ (Windows key + Print Screen) சேர்த்தழுத்தினால் இமேஜ் கோப்பாக டாகுமெண்ட் போல்டரில் My Pictures போல்டரில் Screenshots என்ற பெயரில் உள்ள போல்டரில் சேவ் செய்யப்படும்.
புதிய ஃபோல்டர் உருவாக்க
டெஸ்க்டாப் அல்லது திறந்திருக்கும் விண்டோவில் புதியதாக ஒரு ஃபோல்டரை நீங்கள் உருவாக்க விரும்பினால் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் நியூ போல்டர் தேர்வு செய்யவேண்டும். அல்லது ஃபல் மெனுவில் நியூ போல்டர் தேர்வு செய்து பெறவேண்டும். இதனை கீபோர்டில் Ctrl + Shift + N கீகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் நேரடியாக உருவாக்கலாம்